பாலியல் ரீதியான புகைப்படம்: ஓவியரிடம் மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிர்வாகம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
113Shares
113Shares
ibctamil.com

ஸ்கொட்லாந்தை சேர்ந்த ஓவிய கலைஞர் ஒருவரது புகைப்படங்கள் பாலியல் ரீதியான முறையில் இருப்பதாக கூறி புகைப்படங்களை பேஸ்புக் நிர்வாகம் தடைசெய்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு Jackie Charley என்ற ஓவியர், robin redbreast, stag மற்றும் squirrel ஆகிய மூன்று உயிரினங்களை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையின் முகப்பக்கத்தில் வரைந்துள்ளார்.

அழகாக வண்ணம் தீட்டப்பட்ட இந்த வாழ்த்து அட்டைகளை பேஸ்புக் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்த இந்நபர், அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை கவனித்த பேஸ்புக் நிர்வாகம், இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு பாலியல் தன்மையுடன் இருப்பதால் இதனை பதிவேற்றம் செய்ய இயலாது என தடைசெய்துவிட்டது.

இதனைத்தொடர்ந்து Jackie Charley, தனது பேஸ்புக்கில் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்து, பேஸ்புக்கில் இந்த முடிவு எனக்கு பயங்கர சிரிப்பை வரவழைத்துள்ளது.

எனது புகைப்படங்கள் பாலியல் தன்மையுடன் இருக்கிறதாம், நீங்கள் இந்த புகைப்படங்களை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என்று தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த பலரும் கிண்டலாக கமெண்டுகளை பதிவு செய்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பேஸ்புக் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், எங்கள் குழுவினர் ஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கான புகைப்படங்களை தரம்பார்த்து தணிக்கை அளிக்கின்றனர்.

இதனால் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் வெகு விரைவில் Jackie யின் புகைப்படங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறோம், மேலும் இந்த தவறினை கவனத்தில் எடுத்துக்கொண்டு மன்னிப்புகேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்