பிரித்தானியாவில் சோக சம்பவம்: வைரலாகும் ஆம்புலன்ஸ் வாசகம்

Report Print Santhan in பிரித்தானியா
561Shares
561Shares
ibctamil.com

பிரித்தானியாவின் ஆம்புலன்சில் ஒட்டப்பட்டிருந்த வாசகம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் Livingstone House பகுதியில் வசித்து வரும் 42 வயது நபருடைய நபருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது வழியில் வாகனங்கள் கேட்பாரற்று நின்றுள்ளது, பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தாமல் கண்ட இடங்களில் நிறுத்தியுள்ளனர்.

இதை எல்லாம் தாண்டி செல்வதற்குள் ஆம்புலன்ஸ் 30 நிமிடங்கள் அந்த இடத்திலே சிக்கி தவித்துள்ளது, அந்நேரத்தில் ஆம்புலன்சின் உள்ளே இருந்த நோயாளி இரத்த வாந்தி எடுத்து உயிருக்கு போராடியுள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அந்த ஆம்புலன்சில் இருந்த செவிலியர் John Hagans, ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார், அவர் உயிரை காப்பாற்றுங்கள், தயவு செய்து கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தாதீர்கள், அது எங்கள் வாகனத்தை வழி மறிக்கிறது என்று எழுதிய பேப்பரை அந்த ஆம்புலன்சின் கண்ணாடியில் ஒட்டியிருந்தார்.

இதை அவருடன் சென்ற மற்றோரு செவிலியரான Tasha Starkey தன்னுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். பதிவேற்றம் செய்த சில நிமிடங்களிலே 2000-க்கும் மேல் ரிடுவிட் மற்றும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்