அதிக பெண்களை திருமணம் செய்த பிரித்தானியருக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in பிரித்தானியா
742Shares
742Shares
ibctamil.com

பிரித்தானியாவில் அதிக முறை திருமணம் செய்த நபரின் ஒன்பதாவது மனைவி அவரை விட்டு வேறு ஆணுடன் சென்றிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் ரான் ஷெப்பர்ட் (69), இவருக்கு கடந்த 1966-ல் மார்கரேட் என்ற பெண்ணுடன் முதல் திருமணம் நடந்தது.

பின்னர் பலரை திருமணம் செய்து அவர்கள் எல்லோரையும் பிரிந்த ரான் ஒன்பதாவதாக கிரிஸ்டல் (28) என்ற பெண்ணை திருமணம் செய்து கடந்த ஒரு வருடமாக அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கிரிஸ்டல், ரானை விட்டு வேறு ஆணுடன் தற்போது ஓடி போயுள்ளார். இது ரானுக்கு பெரியளவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடய பொருட்களை எல்லாம் பையில் வைத்து எடுத்து கொண்டு கிரிஸ்டல் சென்றுள்ளார்.

இது சம்மந்தமாக பிரித்தானிய எல்லை அதிகாரிகளுக்கு ரான் தகவல் கொடுத்துள்ளார். சட்ட விரோதமாக கிரிஸ்டல் பிரித்தானியாவிலேயே தங்க வாய்ப்புள்ளதால் அது குறித்து சோதனை செய்ய அதிகாரிகளை கோரியுள்ளார்.

இது குறித்து ரான் கூறுகையில், கிரிஸ்டல் உடனான எனது வாழ்க்கையில் காதலே இல்லை, என்னை அவர் வெறுத்தார்.

தனது வீட்டுக்கு சென்று குடும்பத்தாரை பார்க்க போவதாக கிரொஸ்டல் என்னிடம் கூறினார், ஆனால் வேறு ஒருவருடன் சென்று விட்டார் என சோகமாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்