சொகுசு காரை திருடி விபத்தை ஏற்படுத்திய நபர்: 70 வயதான மூதாட்டி பலி

Report Print Peterson Peterson in பிரித்தானியா
61Shares
61Shares
ibctamil.com

பிரித்தானிய நாட்டில் சொகுசு காரை திருடிய மர்ம நபர் தப்பிக்க முயன்றபோது மற்றொரு கார் மீது மோதியதில் 70 வயதான மூதாட்டி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள Horsham நகரில் தான் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் நேரத்தில் மெர்ஸிடஸ் AMG மற்றும் மெர்ஸிடஸ் A மொடல் கார்கள் இரண்டை மர்ம நபர்கள் இருவர் திருடியுள்ளனர்.

கார்கள் இரண்டும் A24 நெடுஞ்சாலையில் சென்றபோது பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பொலிசார் துரத்தியதால் அச்சம் அடைந்த மெர்ஸிடஸ் A ஓட்டுனர் சுவற்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால், பொலிசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்துள்ளனர்.

இரண்டாவதாக தப்பிய மெர்ஸிடஸ் AMG கார் அசுர வேகத்தில் சென்றபோது ஃபோர்டு ஃபீஸ்டா கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் ஃபீஸ்டாவை ஓட்டிய 70 வயதான மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், அதே காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு 70 வயதான மூதாட்டி தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், தப்பிய இரண்டாவது காரின் ஓட்டுனரை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை. இரண்டு கார்களும் விபத்து நிகழ்ந்த 10 நிமிடங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மூதாட்டி ஒருவரின் உயிரை பறித்த இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்