பிரித்தானிய குடிமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் நாளை இரவு இவ்வருடத்தில் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் வீசும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.

பிரித்தானிய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐஸ்லாந்து நாட்டில் இல்லாத அளவிற்கு நாளை இரவு பிரித்தானிய நாட்டில் கடுமையான குளிர் வீசும்.

ஆர்க்டிக் பகுதியில் இருந்து மிகவும் குளிர்ந்த காற்று பிரித்தானிய எல்லைகளுக்கு அருகில் வீசும் என்பதால் குளிரின் தன்மை கடுமையாக காணப்படும்.

இன்றும் நாளையும் பல இடங்களில் பனிக்கட்டி மழை பொழிய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, நாளை இரவு நேரத்தில் சுமார் -8C என்ற அளவிற்கு கடுமையான குளிர் வீசும்.

இதே நேரத்தில் குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து நாட்டில் -4C முதல் 0C என்ற அளவிலேயே குளிரின் தாக்கம் இருக்கும்.

2017-ம் ஆண்டில் பிரித்தானிய நாட்டில் இன்றும் நாளையும் கடுமையான குளிர் வீசும் நாட்களாக அமையும்.

எதிர்வரும் திங்கள் முதல் கிறிஸ்துமஸ் வரை பிரித்தானிய நாட்டின் பல பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசும் என அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்