ஊழியர்கள் தவறால் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம்: பரிதாபமாக இறந்த இளம்பெண்

Report Print Raju Raju in பிரித்தானியா

அவசர உதவி எண் கட்டுப்பாட்டு அறையில் வேலை செய்யும் ஊழியர்கள் செய்த தவறால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் தோர்செட் கவுண்டியை சேர்ந்தவர் ஆலன் ரிச்மண்ட், இவர் மனைவி ஜாக்குலின், இவர்களின் மகள் காத்ரின் (20).

கடந்த 2015-ஆம் ஆண்டு காத்ரினுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவரின் மண்ணீரல் முழுமையாக பாதித்துள்ளது.

இதன் காரணமாக வீட்டில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக காத்ரின் பெற்றோர் 999 என்ற அவசர உதவி நம்பரை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை கோரியுள்ளனர்.

அவசர உதவி கட்டுப்பாட்டு அறையில் குறைந்த அளவிலான ஊழியர்களே வேலை செய்து வந்ததால் அவர்களுக்கு அதிக பணிச்சுமை இருந்துள்ளது.

அதில் பலர் அந்த சமயத்தில் உணவு இடைவேளையில் சென்றுள்ளனர்.

அந்த பதட்டத்தில் அவசர அழைப்பான ஜாக்குலின் விடயத்தை சாதாரண அழைப்பு வகையில் ஊழியர்கள் சேர்த்துள்ளனர்.

இதன் காரணமாக ஆம்புலன்ஸ் காத்ரின் வீட்டுக்கு வந்தடைய தாமதமாகியுள்ளது. இன்னொரு முறை 999 எண்ணில் தொடர்பு கொண்ட போதும் இதையே ஊழியர்கள் செய்துள்ளனர்.

இதனால ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக காத்ரின் வீட்டிலேயே உயிருக்கு போராடியுள்ளார், பின்னர் ஒருவழியாக அவரை ஆலனும், ஜாக்குலினும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு காத்ரீனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் இரு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரத்துக்கு முன்னர் காத்ரீனை அழைத்து வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers