10 ஆண்கள்.. 100 குற்றங்கள்: பிரித்தானியாவில் கைதான குற்றவாளிகளின் திடுக்கிடும் தகவல்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 7 ஆண்டுகளில் 10 ஆண்கள், சுமார் 100 கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் குழந்தை கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் Operation Tendersea என்று பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் 29 பேர் கைது செய்யப்பட்டனர், இதில் 2 பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்கள் Leeds Crown நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 10 ஆண்கள் மீது சுமார் 100 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை கடத்தல், போதை பொருள், மற்றும் இனரீதியான தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2004- 2011ம் ஆண்டு காலகட்டத்தில் இக்குற்றங்கள் நடந்ததாக கூறப்பட்டாலும் அதனை மறுத்துள்ளனர்.

அந்த வகையில் Amere Singh Dhaliwal 35-வயதான இவன் Thornton Lodge பகுதியைச் சேர்ந்தவன். இவன் மீது 21 கற்பழிப்பு, போதை பொருள் விநியோகம் செய்தது, 14 பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Zahid Hassan (28), 8 பெண்களை பாலியல் துஷ்பிரயோக செய்தது, குழந்தைகளை கடத்தியது மற்றும் போதை பொருள் விநியோகம் செய்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, Lockwood பகுதியைச் சேர்ந்தவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paddock-ஐ சேர்ந்த Nahman Mohammad மீது இரண்டு கற்பழிப்பு குற்றங்களும், Lockwood-ஐ சேர்ந்த Irfan Ahmed (32) மீது 6 கற்பழிப்பு குற்றங்களும், Dewsbury-ஐ சேர்ந்த Mohammed Aslam ( 29) இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது, Berry Row-ஐ சேர்ந்த Raj Singh Barsran (33) மீது இரண்டு கற்பழிப்பு குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் Old Trafford -ஐ சேர்ந்த Hamzha Ali Saleem (37) 3 பேரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் Crosland Moor-ஐ சேர்ந்த Zubair Ahmed (31) மற்றும் Paddock-ஐ சேர்ந்த Mohammed Kammer (32) ஆகியோர் 2 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 8-ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்