பிரித்தானியா தீ விபத்தில் பலியான மகளின் கடைசி வார்த்தைகள்! கண்கலங்கும் தாய்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஏற்பட்ட கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த Gloria Trevisan என்ற பெண், தனது தாயுடன் தொலைபேசியில் பேசிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த யூன் மாதம் 17ம் திகதி லண்டனின் வடக்கு Kensington பகுதியில் Grenfell Tower என்னும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் தீ விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 80 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் Gloria Trevisan என்ற 26 வயது பட்டதாரி பெண்ணும், அவரது வருங்கால கணவரும் அடங்குவர்.

தீ விபத்து ஏற்பட்ட போது Gloria Trevisan தனது தாயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது, என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் நான் உங்களைக் கட்டித் தழுவ முடியாது. என்னுடைய மொத்த வாழ்க்கையும் எனக்கு முன்னால் சென்றுவிட்டது, இது மிகவும் அநியாயம்.

எனக்கு சாக விருப்பமில்லை, நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன், நான் சொர்க்கத்திற்கு செல்வேன் என்று நினைக்கிறேன், அங்கிருந்து நான் உங்களுக்கு உதவுவேன்.

இதுவரை நீங்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நன்றி அம்மா என தனது கணத்த குரலில் பேசியுள்ளார்.

இந்த உரையாடல் குறித்து Gloriaவின் தாய் Emanuela Disaro கூறுகையில், அவளின் வார்த்தைகளைக் கேட்டும் என்னால் அவளுக்கு உதவ முடியாமல் போனது. என்னால், அவள் என்ன கூறினால் என்றே நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

தீ விபத்து நடப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னர் தான் Gloria-வும் அவரது வருங்கால கணவர் Marco Gottardi வேலை காரணமாக லண்டனுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்