இளம் மனைவியை இரக்கமின்றி கொலை செய்த கணவன்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

தலையில் பலத்த காயமடைந்து பெண் உயிரிழந்த வழக்கில் அவர் கணவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் கால்கோட் கவுண்டியை சேர்ந்தவர் ஸ்டீவன் (32) இவர் மனைவி சிமோன் கிரைன்ஞர் (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சிமோன் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சிமோனின் தோழி உடனடியாக இது குறித்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்க மருத்துவ ஊழியர்கள் அங்கு வந்தனர்.

ஆனால், சிமோனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்னரே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் அடுத்த நாள் சிமோனின் கணவர் ஸ்டீவனை கைது செய்ததோடு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார்கள்.

கைதான ஸ்டீவனை பொலிசார் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி ஷோமன் கான் கூறுகையில், இந்த வழக்கில் நீங்கள் மிகக் கடுமையான குற்றத்தை எதிர்கொள்கிறீர்கள், இந்த வழக்கு உயர்நீதிமன்றமான குரவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என தெரிவித்தார்.

இதை கேட்டதும் ஸ்டீவன் தனது தலையில் கைவைத்து கொண்டு சோகத்தை வெளிப்படுத்தினார்.

கொலைக்கான காரணத்தை பொலிசார் இன்னும் வெளியிடாத நிலையில், கொலை நடந்த வீட்டில் இன்னும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையில் உயிரிழந்த சிமோனுக்கு அவர் குடும்பத்தார் மனம் உருக அஞ்சலி செலுத்தினார்கள்.

அவர்கள் கூறுகையில், எங்கள் தேவதையான சிமோன் இளம் தாயாக, மகளாக, சகோதரியாக, நல்ல தோழியாக திகழ்ந்தார்.

அவர் இழப்பு எங்களுக்கு வேதனையளிக்கிறது. சிமோன் விட்டு சென்ற அவரின் இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பாக பராமரிப்போம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்