பிரித்தானியா இளவரசரை வரவேற்ற புகைமூட்டம்: வைரலாக்கிய நெட்டின்சன்கள்

Report Print Santhan in பிரித்தானியா
269Shares

இந்தியா வந்துள்ள பிரித்தானியா இளவரசரை அதிகாரிகள் வரவேற்பதற்கு முன்னர் புகைமூட்டம் வரவேற்றுள்ளதாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு உச்சநிலையை எட்டியுள்ளதால், சாலையில் வாகனம் ஓட்டிச் செல்ல முடியாத அளவிற்கு புகை மூட்டம் நிலவுகிறது.

இதனால் பலருக்கும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படுகிறது. மாணவ மாணவிகளின் நலனுக்கா சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா இளவரசர் Charles மற்றும் அவரது மனைவி Camilla Parker ஆகியோர் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.

இவர்கள் டெல்லியில் வந்து இறங்கிய போது, அதிகாரிகள் வரவேற்பதற்கு முன்னர் புகைமூட்டம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அதில் ஒருவர், டெல்லி வந்திருக்கும் இளவரசர் புகைமூட்டம் காரணமாக யார் கை கொடுக்கிறார்கள் என்பதை தெரியாதது போல் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று பலரும் டெல்லியின் காற்று மாசுபாடு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்