14 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம்: பிரித்தானியா மாணவன் கையில் சிக்கியது

Report Print Santhan in பிரித்தானியா
529Shares

பிரித்தானியா மாணவர் ஒருவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கிடைத்துள்ளது.

பிரித்தானியாவின் Portsmouth பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் Grant Smith, டோர்செட் கடற்கரையில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 2 பற்களை பார்த்துள்ளார்.

இது பார்ப்பதற்கு எலியின் பற்களைப் போன்று உள்ளது, அதனால் இது நிச்சயமாக பொந்துக்குள் வாழும் உயிரினத்தின் பற்கள்தான் என்று கருதி எடுத்து வந்துள்ளார்.

இதைக் கண்ட உயிரியல் ஆராய்சியாளர் ஸ்டீவ் சுவீட்மேன், இந்த உயிரினம் பாலூட்டியாக இருக்கலாம்.

பரிணாம வளர்ச்சியில் டயனோசரசின் தொடக்க நிலை உயிரினமான டியூரிஸ்டோடான் என்சோமி மற்றும் டியூரிஸ்டோதெரியம் நியூமனி ஆகியவற்றில் ஒன்றாகவும் இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும், இந்த பற்கள் கொண்ட உயிரனம் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்