இலங்கைத் தமிழரின் கடைக்குள் நடந்த கொடுமை! மர்மநபர்கள் அட்டகாசம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா
239Shares

பிரித்தானியாவில் தமிழர் ஒருவரின் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் பட்டாசு வெடியினை போட்டமையினால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

லிவர்பூல் பகுதியிலுள்ள இலங்கை தமிழரின் கடைக்குள் வீசிய பட்டாசு பெட்டி வெடித்தமையினால் கடையின் ஊழியர் ஒருவர் கண் பார்வையை இழந்துள்ளார் என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான சீ.சீ.டீ.வி காணொளியை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

அமோமா என்ற பட்டாசு பெட்டியில் 1200 சுற்று வானவேடிக்கைகளைக் கொண்டிருந்தது. அந்த பெட்டி வெடித்து சிதறியுள்ளது.

நேற்று இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தின் போது கடையில் சிக்கியிருந்த ஊழியர் அதிலிருந்து தப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பட்டாசு வெடியை அணைக்க முயன்ற 43 வயதான சஞ்சய விக்ரமகே என்ற ஊழியரின் கண்ணில் தீ பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நான் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எனது சக பெண் ஊழியர் உதவுமாறு அழைப்பு விடுத்தார்.

நான் சென்ற போது பட்டாசு முழுவதும் வெடிக்க ஆரம்பித்திருந்தது. என்னால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. கடை முழுவுதும் புகை நிறைந்து காணப்பட்டது.

நான் பெண் ஊழியரை காப்பாற்ற முயற்சித்தேன். இதன்போது எனது கண்கள் எரிந்து விட்டது” ” என பாதிப்படைந்த சஞ்சய தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த சிவசெல்வன் என்பவரே அந்த கடையின் உரிமையாளராகும். அவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் அந்த கடையை நடத்தி வருகின்றார்.

இந்த சம்பவம் மீண்டும் ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளளார்.

இந்த நாடு மிகவும் பாதுகாப்பானது என்ற காரணத்தினாலே இங்கு வந்தேன். எனினும் மிகவும் பயமாகவுள்ளது. எனது நண்பர்களும் அச்சத்தில் உள்ளனர். அத்துடன் வாடிக்கையாளர்கள் எனது கடைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

குறித்த சம்பவத்தினால் 500 பவுண்ட் பெறுமதியான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அதிஷ்டவசமாக சம்பவம் இடம்பெறும் போது கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இருக்கவில்லை என அவர் குறிப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஒரு நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

சீ.சீ.டீ.வி காணொளிக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது மிகவும் ஆபத்தானது மற்றும் முட்டாள்தனமான செயலாகும் என தலைமை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்னாள் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்