பிரித்தானியாவில் பயங்கரம்..8 கார்கள் மோதல்: பலர் படுகாயம்

Report Print Santhan in பிரித்தானியா
495Shares

பிரித்தானியாவில் 8 ferrari கார்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் Croydon நகரில் உள்ள Gravel Hill பகுதியில் 8 விலை உயர்ந்த கார்களான ferrari கார்கள் மோதியதால், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அவர்களின் உயிருக்கு எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றும், கழுத்து மற்றும் கால் பகுதிகளில் தான் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், இந்த விபத்தில் 8 பேர் சிக்கியுள்ளனர் என்றும் ஆனால் 4 பேர் மட்டுமே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒருவரின் பெயர் Samantha Nott எனவும் நீச்சல் ஆசிரியரான இவர் Royal Russell பள்ளியில் வேலை செய்து வருவதாகவும் தற்போது Shirley வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய 8 பெராரி கார்களின் மதிப்பு £450,000 அதாவது இலங்கை மதிப்பில் 9 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்