மகளை கொலை செய்த கோடீஸ்வர தந்தை

Report Print Raju Raju in பிரித்தானியா
1426Shares

ஏழு வயது மகளை கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் தென் மேற்கு லண்டனை சேர்ந்தவர் ராபர்ட் பீட்டர்ஸ் (55). கோடீஸ்வரரான இவர் பழமையான பொருட்களை விற்கும் தொழிலை தனது சகோதரருடன் இணைந்து செய்து வந்தார்.

மூன்று முறை திருமணம் செய்துள்ள ராபர்ட் அதில் ஒரு மனைவியான கிரிட்டியாவுடன் £1 மில்லியன் மதிப்பிலான சொகுசு பங்களாவில் வசித்து வந்தார்.

ராபர்டின் மகள் சோபியா (7)-வும் அங்கு உடன் வசித்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சோபியா உடலில் படுகாயங்களுடன் வீட்டில் உயிருக்கு போராடியுள்ளார்.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ராபர்ட் மீது கொலை முயற்சி வழக்கு செய்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோபியா தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் ராபர்ட் மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிய பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

கொலைக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் ராபர்ட் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்