பிரித்தானியாவில் பிறந்தவர் டானியா ஜார்ஜுலஸ் (33). இவர் அமெரிக்காவை சேர்ந்த ஐ.எஸ் இயக்கத்தில் இருக்கும் நபரை திருமணம் செய்து நான்கு குழந்தைகளை பெற்றவராவார்.
பின்னர், கணவரை பிரிந்து, ஐ.எஸ் இயக்க சிந்தனைகளை விட்டு வெளியேறி தற்போது வேறு ஆணுடன் டேட்டிங் செய்து வருகிறார்.
அவரின் வாழ்க்கை பாதை பல வித்தியாச அனுபவங்களை கொண்டது. அது குறித்து அவரே கூறுகிறார்.
நான் லண்டனின் ஹாரோ நகரில் பிறந்து வளர்ந்தேன், சிறுவயதில் பல இனவெறி தாக்குதல்களை நான் சந்தித்துள்ளேன்.
இதற்காக சமுதாயத்தை பழிவாங்கும் வழியை அப்போதிலிருந்தே தேடி கொண்டிருந்தேன்.
என்னுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் சிறுவயதில் நன்றாக படிப்பார்கள், ஆனால் நான் கஞ்சா புகைத்து கொண்டு பள்ளிக்கு சரியாக செல்லமாட்டேன்.
கடந்த 2001-ல் அமெரிக்கா டுவின் டவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள், அது என்னை ஈர்த்தது, தீவிரவாதம் எனக்கு அப்போதிலிருந்து பிடித்து போனது.
சில வருடங்கள் கழித்து இஸ்லாமிய ஓன்லைன் திருமண தகவல் மையம் மூலம் ஜான் ஜார்ஜிலிஸ் தொடர்பு கிடைத்தது. அவர் கிறிஸ்துவ மதத்திலிருந்து இஸ்லாமியத்துக்கு மாறியவர் ஆவார்.
நாங்கள் பின்னர் சந்தித்து கொண்டு 2004-ல் பிரித்தானியாவில் திருமணம் செய்து கொண்டோம்.
பிறகு நான் மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையில், ஜிகாதிகளுக்கு உதவியதாக என் கணவர் ஜானை பொலிசார் கைது செய்தார்கள்.
2011-ல் சிறையிலிருந்து ஜான் வெளியில் வந்த நிலையில் நான் மீண்டும் கர்ப்பமானேன், 2013-ல் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் இயக்கத்தில் சேர இருவரும் முடிவெடுத்தோம்.
அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் சிரியாவுக்கு சென்ற நிலையில் கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த வீட்டில் குழந்தைகளுடன் தங்கினோம்.
அங்கு சரியான சாப்பாடு இல்லாததால் எங்கள் உடல்நலம் கெட்டு போனது. நமது நாட்டுக்கே போய்விடலாம் என நான் ஜானிடம் கூறிய நிலையில் என்னையும் என் குழந்தைகளையும் மனித கடத்தில் ஈடுபடுபவர்களிடம் ஜான் விற்றுவிட்டார்.
பிறகு ஜான் பெற்றோர் உதவியுடன் நாங்கள் மீட்கபட்டு அமெரிக்காவின் டெக்சாஸுக்கு வந்தோம்.
இதையடுத்து ஜானை பிரிய முடிவெடுத்து விவாகரத்துக்கு நான் முயற்சித்தேன்.
தற்போது வரை ஜான் சிரியாவில் தான் உள்ளார், ஐ.எஸ் இயக்கத்தில் உள்ள மிக உயர்ந்த அமெரிக்கராக ஜான் உள்ளார்.
தீவிரவாதம் சம்மந்தமான விடயங்களை புறம்தள்ளி சாதாரண வாழ்க்கை வாழ முடிவெடுத்த நான் எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளார்கள், என்னை கைவிட்ட என் முன்னாள் கணவர் பின்லேடன் போன்று ஆக முயன்று வருகிறார் என ஓன்லைன் டேட்டிங் தளத்தில் பதிவு செய்தேன்.
இதற்கு உடனடியாக 1300 பதில்கள் வந்தது.
அதில் கிரைக் என்ற சாப்ட்வேர் ஊழியர் என் நிலையை அறிந்து நன்றாக பேசினார்.
நான் அவருடன் தற்போது டேட்டிங் செய்து வருகிறேன், என் குழந்தைகள் நன்றாக உள்ளார்கள்.
தீவிரவாதத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன், முன்னர் தீவிரவாதிகளாக இருந்து திருந்தியவர்களுக்கு இது உதவும் என டானியா கூறியுள்ளார்.