பிரித்தானிய தம்பதிக்கு நடந்த அவலம்

Report Print Raju Raju in பிரித்தானியா
292Shares

பிரித்தானிய தம்பதிகளை இந்தியாவில் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டி மற்றும் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ஒரு இளம் தம்பதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள மொகமா நகருக்கு இருவரும் வந்தார்கள்.

கடந்த ஞாயிறு இரவு நேரத்தில் தம்பதிகள் அருகில் வந்த உள்ளூரை சேர்ந்த இருவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசைபடுவதாக கூறியுள்ளனர்.

பின்னர் அந்த இடத்துக்கு வேறு சிலரும் வந்துள்ளனர். இதையடுத்து கும்பல் மீது பிரித்தானிய தம்பதிக்கு சந்தேகம் வந்துள்ளது.

கும்பலில் இருந்த இரண்டு ஆண்கள் தம்பதிகளிடம் பணம் கேட்டு மிரட்ட அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து பிரித்தானியா பெண் மீது கை வைத்து தவறாக நடக்க அவர்கள் முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க பிரித்தானிய தம்பதி அருகிலிருந்த கங்கை நதியில் குதித்துள்ளனர்.

எப்படியோ நீந்தி மறுபக்கம் உள்ள பண்டராக் கிராமத்தில் தஞ்சம் அடைந்த தம்பதி நடந்த விடயத்தை கிராம மக்களிடம் கூறினார்கள்.

அவர்களின் பேச்சு ஓரளவுக்கு மக்களுக்கு புரிந்த நிலையில், இருவரும் பாதுகாக்கப்பட்டு இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கபட்டது.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்