இந்தியா செல்லும் பிரித்தானியா இளவரசர்

Report Print Santhan in பிரித்தானியா

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரித்தானியா இளவரசர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா பார்க்கர் ஆகியோர் அரசு முறைப் பயணமாக இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளுக்கு பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், இதில் நவம்பர் 8-ஆம் திகதி சார்லஸ் இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம தெரிவித்துள்ளது.

இந்திய பயணத்தின் போது அவர்கள் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டவர்களைச் சந்திக்கிறார்கள். மோடியுடனான சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சார்லஸ் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் காமன்வெல் தலைவர்கள் கூட்டத்தில் மோடியை அழைப்பார் எனவும், அதுமட்டுமின்றி தற்போது நிலவும் காலநிலை மாற்றம், ஜிடிபி வளர்ச்சி ஆகியவை குறித்து பேசவுருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த இளவரசர் சார்லஸ் கேரளாவில் உள்ள அருங்காட்சியங்களையும்,சுற்றுலாத்தளங்களையும் சுற்றிப்பார்த்தார். அதன் பின் கேரளாவின் பாரம்பரியங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்