4 வயது சிறுவனுக்கு 87 முறை அறுவைசிகிச்சை: தாயாரின் உருக்கமான வேண்டுகோள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் குடல் மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கும் 4 வயது சிறுவனுக்கு இதுவரை 87 முறை அறுவைசிகிச்சை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் மெர்ஸெஸைட் பகுதியில் குடியிருக்கும் Mollie(21) என்பவரது 4 வயது Bobby Mcintyre குழந்தையே குடல் மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கிறார்.

பிறக்கும்போதே பெருங்குடல் மற்றும் வயிறு தொடர்பான நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த குழந்தை பாபிக்கு பெரும்பகுதி குடலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

தொடர்ந்து கடுமையான வேதனை அனுபவித்து வரும் சிறுவன் பாபிக்கு சிறப்பு அறுவைசிகிச்சைக்காக அவர்து தாயார் 15,000 பவுண்ட் தொகையை பொதுமக்களிடம் இருந்து திரட்டி வருகிறார்.

மரணத்தின் வாசலில் இருக்கும் சிறுவன் பாபி தற்போது 88-வது அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கிறார்.

இனி அறுவைசிகிச்சையால் பலனில்லை என மருத்துவர்கள் கைவிட்ட பின்னரும், தமது மகனுக்கு தம்மால் முடிந்த சிறந்த வாழ்க்கையை வழங்க வேண்டும் என Mollie கடுமையாக முயன்று வருகிறார்.

குழந்தை பாபி பிறந்தபோது தனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனவும், ஆனால் குழந்தை எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்ற மறுத்துவர்கள் கூறிய அந்த தகவல் தம்மை பைத்தியமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எவரிடமும் உதவி கேட்டு நின்றிராத தாம் தற்போது தமது 4 வயது மகனுக்காக எங்கிருந்து உதவி வந்தாலும் பெற்றுக்கொள்ளும் மன நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்