பிரித்தானியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண் கோரிய விவாகரத்து

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சோபியா என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட வாழ்வு பிடிக்கவில்லை என்று கூறி விவாகரத்து செய்யவுள்ளார்.

மேலும், தனது காதலனை மணக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

லண்டனின் பிளிங்டன் பகுதியை சேர்ந்தவர் சோபியா. 35 வயதாகும் இவர் இந்த உலகில் எனக்கு எந்த ஆண், பெண்ணையும் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி கடந்த ஆண்டு தன்னை தானே திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.

அதன் மூலம் ஒரே நாளில் பிரபலமான இவர், தற்போது இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு என்னுடன் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ரவுரி பாராட் என்பவரை காதலிக்கும் இவர், தன்னை தானே விவாகரத்து செய்து விட்டு தனது காதலரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

காதலில் ஆர்வம் இல்லாதவர்கள் இப்படி தன்னை தானே திருமணம் செய்யும் முறையை ‘சோலோ தாழி’ என்றழைக்கின்றனர்.

ஆனால், பிரித்தானியாவில் இந்த முறை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...