பிரித்தானியாவின் கவர்ச்சி நகரம் இதுதான்: ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பெண்களை விட ஆண்கள் 54% அதிகம் ஊதியம் பெறும் Chester நகரம் பிரித்தானியாவின் கவர்ச்சி நகரம் என்ற கெளரவத்தை பெற்றுள்ளது.

Adzuna என்ற ஓன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

Chester-ல் சராசரியாக ஆண்கள் வருடத்துக்கு £38,000-ம் பெண்கள் £25,000 ஊதியமும் பெறுகிறார்கள்.

தென் கிழக்கு பிரித்தானியாவில் இரு பாலினரும் பெறும் ஊதியத்தில் சராசரியாக 39% வித்தியாசம் உள்ளது.

Belfast நகரில் தான் ஊதியத்தின் வித்தியாசமானது மிக குறைவாக 19% உள்ளது.

பெண்களை விட ஆண்கள் அதிகம் ஊதியம் பெறும் அதிக சதவீதத்தினர் வாழும் நகரங்கள் அடிப்படையில் Chester-கு அடுத்த இடங்களில் Crawley (50%), Warrington (48%), High Wycombe (47%) மற்றும் Worcester (45%) நகரங்கள் உள்ளன.

அதே போல ஊதியத்தின் வித்தியாசம் மிக குறைவாக உள்ள நகரங்களில் Belfast-க்கு அடுத்த இடங்களில் Southend (20%), Brighton (21%), Glasgow (23%) மற்றும் Luton (23%) நகரங்கள் உள்ளன.

Adzuna ஓன்லைன் நிறுவனத்தின் துணை நிறுவனர் டவுங் மோன்ரோ கூறுகையில், ஆணுக்கும் பெண்ணுக்கும் 54% என்ற அளவில் உள்ள ஊதிய வேறுபாடு ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இது மாறவேண்டுமானால் பெண் ஊழியர்களுக்கு நிறுவனம் அதிக ஆதரவு தர வேண்டும். தொழில்முறை இடைவெளிகளுக்குப் பிறகு வேலைக்குத் திரும்பும் பெண்கள், உயர்ந்த ஊதியம், உயர்ந்த பதவிகள் போன்ற விடயங்களுக்கு உதவி பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் உயர் நிர்வாக பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...