10 குழந்தைகளை கொண்ட குடும்பம்: ஒரு மாதத்திற்கான மளிகை செலவு எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இங்கிலாந்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு ஏற்கனவே 10 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 11வது குழந்தைக்கு தயாராகவுள்ளதாக Channel 5 நடத்தும் Big Family Values நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளனர்.

Clive(50), Louise (34) தம்பதியினர் Lincolnshire - வில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 10 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை செலவு மட்டும் £1,000 ஆகும். 15 பெட்டி தானியங்கள், 10 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 28 Pints பால் தேவைப்படுகிறது.

மேலும், வாரத்திற்கு 35 loads துணிகளை துவைக்க வேண்டியுள்ளது, குழந்தைகளை பராமரிக்கும் பணியினை 50 வயதுடைய தந்தை பார்த்துக்கொள்கிறார்.

தாய் Louise குடும்பத்திற்கு தேவையான வருமானத்தினை ஈட்டுகிறார், இவர்கள் குடும்பமாக ஒன்று சேர்ந்து எங்காவது வெளியில் சென்றால், அனைத்து நபர்களுக்கும் இரண்டு கார்கள் தேவைப்படுகின்றன.

10 குழந்தைகள் இருந்தும் தற்போது 11வது குழந்தைக்கு Louise தயாராகியுள்ளார், இவர்களது மகளான 8 வயது சிறுமி Frankie கூறியதாவது, எங்கள் வீட்டில் இதோடு குழந்தைகளை நிறுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும்.

மேலும் குழந்தை பிறந்தால் அது எனது பெற்றோருக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...