லண்டனில் பட்டப்பகலில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: தேடி வரும் பொலிசார்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் உள்ள பார்க் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள Avery Hill பார்க்கில் கடந்த 4-ஆம் திகதி 14-வயது சிறுமி ஒருவர் மர்ம நபர் ஒருவரால் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் அந்த மர்மநபர் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அறக்கட்டளையைச் சேர்ந்த Mark Azariah என்பவர், சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதனால் இதில் தொடர்புடைய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால், அவனைப் பற்றி தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

சந்தேகிக்கும் நபர் கருப்பு நிற மனிதன் எனவும், ஒல்லியாகவும் வயது 20 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அந்த நபர் கைது செய்யப்படுவான் எனவும், தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்