டயானா இன்று உயிரோடு இருந்தால் இப்படி தான் இருப்பார்: வைரலாகும் ஓவியம்

Report Print Raju Raju in பிரித்தானியா

டயானா இப்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பார் என கூறும் வகையில் அவரின் ஓவியத்தை பிரபல ஓவியர் வரைந்துள்ளார்.

பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டில் தனது 36-வது வயதில் கார் விபத்தில் மரணமடைந்தார்.

டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் உயிரோடு இருந்தால் அவருக்கு 56 வயதாகியிருக்கும்.

56 வயதில் டயானா இப்படி தான் இருந்திருப்பார் என பிரபல அமெரிக்க ஓவியர் D’Lynn Waldron அவரின் உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.

இளம் வயதில் இருந்த நேர்த்தியும், கம்பீரமும் 56 வயது டயானாவின் ஓவியத்திலும் காண முடிகிறது.

இது குறித்து Waldron கூறுகையில், டயானா தனது 56 வயதில் இப்படி தான் இருந்திருப்பார்.

இந்த வயதிலும் வசீகரமாக இருக்கும் டயானாவின் கண்களில் பிரகாசம் உள்ளது என கூறியுள்ளார்.

டயானா இப்போதும் மக்களின் இளவரசி தான் எனவும் Waldron கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்