பேஸ்புக்கில் கணவரை விற்க முயன்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விளைவு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் King's Lynn நகரை சேர்ந்தவர் ராப் (33). இவர் மனைவி தெரேசா. தெரேசாவிற்கு யாரேனும் சப்தமாக சூயிங் கம் மெல்வது போன்று செய்து தொல்லை செய்தால் பிடிக்காது

இந்நிலையில், அவரின் கணவர் ராப் இணையத்தில் மனைவிக்கு பிடிக்காத வீடியோவை ஓடவிட்டு அவரை வெறுப்பேற்ற முடிவு செய்தார்.

அதன்படி, குறித்த வீடியோவை சத்தமாக ராப் ஓடவிட்டுள்ளார். இதை கண்டு எரிச்சலடைந்த தெரேசா கணவரை பழிக்கு பழி வாங்குவதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்றார்.

பின்னர், கணினியில் தனது பேஸ்புக் பக்கத்தை திறந்த தெரேசா தனது கணவர் இலவச விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், கணவரை பற்றிய தகவல்கள், வயது, போன்றவற்றை கூறி, வீட்டு வேலைகள், கழிவறை வேலைகள் நன்கு செய்வார் என குறிப்பிட்டு, இலவசமாக கூட்டி செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்டு எல்லோரும் வெறுமனே சிரிப்பார்கள் என தெரேசா நினைத்திருந்த நிலையில் பெண்கள் உட்பட பலரும் ராப்பை வாங்கி கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த தெரேசா குறித்த பேஸ்புக் பதிவை உடனே நீக்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்