இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் மோதிய போட்டியில் கிரிக்கெட் ஸ்டேண்ட் இடிந்து விழுந்து விபத்து

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபெற்ற இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டி20 போட்டியின் போது ரசிகர்கள் அமர்ந்திருந்த கிரிக்கெட் ஸ்டேண்ட் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டி20 போட்டி Durhamல் உள்ள Emirates Riverside மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி துடுப்பாடிக்கொண்டிருந்த போது திடீரென ரசிகர்கள் அமர்ந்திருந்த கிரிக்கெட் ஸ்டேண்ட் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...