லண்டனை உலுக்கிய பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் தாக்குதல்தாரி கைது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் இளைஞர் ஒருவரை கென்ட் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

18 வயது நிரம்பிய குறித்த இளைஞர் டோவர் பகுதியில் வைத்து பொலிசாரால் மடக்கிப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த நபரை தென் லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

29 பேர் காயமடைவதற்கு ஏதுவான பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் வெடிகுண்டு தாக்குதல்தாரி நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்விக்கு பொலிசார் பதில் கூற மறுத்துள்ளனர்.

லண்டனில் மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலைய தாக்குதல் நடந்து 24 மணி நேரத்திற்குள், தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளது, பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை சரியான கோணத்தில் சென்றுகொண்டிருப்பதை காட்டுவதாக பொலிஸ்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரை நேரில் பார்த்த 45 நபர்களிடம் இருந்து மொழி எடுத்துள்ளதாகவும், மேலதிக தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை இந்த வழக்கு தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து 77 புகைப்படங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதான இளைஞர் தொடர்பில் புகைப்படமோ மேலதிக தகவல்களோ எதுவும் இதுவரை பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers