இலங்கையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானியரின் உடல் மீட்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இலங்கையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானியரின் உடல் மீட்பு

இலங்கையில் விடுமுறையின்போது முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய பத்திரிகையாளரின் உடலை மீட்டுள்ளனர்.

இலங்கையில் முதலைக்கு இரையான பிரித்தானிய பத்திரிகையாளரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலில் 7 முறை முதலை கடித்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்துவரும் Paul McClean, தமது விடுமுறை நாட்களை இலங்கையில் செலவிட்டு வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவர் தங்கியிருந்த அறையின் அருகாமையில் உள்ள ஆறு ஒன்றில் கை கழுவ சென்றுள்ளார்.

அப்போது அந்த ஆற்றில் இருந்து வெளியே வந்த முதலை ஒன்று குறித்த பத்திரிகையாளரை தாக்கி, இழுத்துச் சென்றுள்ளது.

24-வயதான Paul McClean இலங்கையின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள East Beach Surf Resort ல் தங்கியிருந்துள்ளார்.

முதலையால் இழுத்துச் செல்லப்படும்போது குறித்த பத்திரிகையாளர் காப்பாற்றும்படி கைகளை வீசியுள்ளார். ஆனால் எவரும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.

இந்த நிலையில் முதலை தாக்கிய அதே பகுதியில் இருந்தே தற்போது அவரது உடலை மீட்டுள்ளனர். உடற்கூறு சோதனை முடிந்த பின்னரே மேலதிக தகவல் தெரிய வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...