பறக்கும் விமானத்தில் இருந்து கழண்டு விழுந்த சக்கரம்: விமானி எடுத்த முடிவு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று சக்கரம் கழண்டு விழுந்ததை அடுத்து வேறொரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகருக்கு புறப்பட்ட விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்ததால் குறித்த விமானத்தின் விமானி டெர்பியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

லண்டன் Stansted பகுதியில் இருந்து காலை 8 மணிக்கு கோபன்ஹேகன் நோக்கி புறப்பட்டு சென்றது Ryanair விமானம் ஒன்று.

இந்நிலையில் விமானத்தின் முன்பக்க சக்கரம் ஒன்று கழண்டு விழுந்துள்ளதை கவனித்த விமானி உடனடியாக டெர்பி பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

அசம்பாவிதம் ஏதுமின்றி குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் புறப்பட்டுச்செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக புறப்பட்டு செல்லும் எனவும் குறித்த விமான சேவை நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெர்பி விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கிருந்ததால் குறிப்பிட்ட சில விமானங்கள் அங்கிருந்து புறப்பட தாமதமானதாக தெரிய வந்துள்ளது.

விமானத்தில் இருந்து சக்கரம் கழண்டு விழுந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் இதுபோன்று நிகழாமல் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers