பிரித்தானியாவில் இலங்கை இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Report Print Vethu Vethu in பிரித்தானியா

இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியா Milton Keynes பகுதியில் சுரேன் சிவனந்தன் என்ற இலங்கையரை கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றொரு இலங்கையர் மற்றும் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

38 வயதான ஞானசந்திரன் பாலசந்திரன் மற்றும் சட்ட ரீதியான காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாத 17 வயது இளைஞனுக்குமே இவ்வாறு ஆயுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Luton Crown நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி Luton Crown நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த இருவரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டனர்.

பாலசந்திரனுக்கு குறைந்தபட்சம் 18 வருட சிறைத்தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன். மற்றைய இளைஞனுக்கு குறைந்த பட்சம் 11 வருட சிறைத்தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக 24 வயதுடைய பிரசாந்த் தேவராசா குற்றவாக தீர்ப்பளிக்கப்பட்டார். ஏதோ நோக்கத்துடன், சுரேன் சிவனந்தனை கடுமையாக தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்த இலங்கையரான சுரேன் சிவனந்தன் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனது பெண் நண்பியை சந்திப்பதற்காக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.

அதற்கமைய, Milton Keynes பகுதியில் வசித்த பாலச்சந்திரனினால் கைவிடப்பட்ட மனைவியுடன் தங்கியிருந்தார் என கூறப்பட்டது.

இதனால் சுரேனை கொலை செய்வதற்கு திட்டமிட்ட பாலசந்திரன் அதற்கு முன்னர் 12 மணி நேரம் அவரை சிறைப்பிடித்து வைத்திருந்ததோடு , Milton Keynes பகுதியில் வைத்து தொடர்ச்சியாக தாக்கி கொலை செய்துள்ளார்.

அதற்கு அடுத்த நாளான ஜனவரி மாதம் 21ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் சிவானந்தனின் சடலம் Great Linford பகுதியில் உள்ள கடை தொகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் அவரது உச்சந்தலையில் தீவிர காயம் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.

அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதல் முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

“சுரேன், தனது பாடசாலை நாட்களிலிருந்து தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை சந்திக்க பிரித்தானியாவுக்கு பயணித்த ஒரு ஆரோக்கியமான இளைஞர் ஆவார். அவர்கள் சமீபத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு மீண்டும் ஒரு புதிய மற்றும் மகிழ்ச்சியான உறவை ஆரம்பித்தார்கள் என தலைமை பொலிஸ் அதிகாரி Mark Glover தெரிவித்துள்ளார்.

பாலசந்திரனின் முன்னாள் மனைவியுடன் சுரேன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு, பாலசந்திரனுக்கு பொறாமையை தூண்டியுள்ளது.

அதனால் ஏற்பட்ட கோபத்தில் சுரேனை கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கமைய சுரேனின் உடலில் 87 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 36 காயங்கள் தலை மற்றும் கழுத்து பகுதியில் காணப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்டு குளிரான இடத்தில் அவரை விட்டு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளார்” என பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...