பயங்கரவாதம் தொடர்பில் 379 பேரை கைது செய்துள்ள பிரித்தானிய பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
388Shares
388Shares
lankasrimarket.com

பயங்கரவாதம் தொடர்பில் கடந்த ஓராண்டில் மட்டும் 379 பேரை பிரித்தானிய பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியா மிகவும் பாதிக்கப்பட்டது.

Westminster பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர், மான்செஸ்டர் அரங்கு தாக்குதலில் 22 பேர், லண்டன் பாலத்தில் நடந்த தாக்குதலில் 8 பேர் என மூன்று முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இந்த ஆண்டு யூன் மாதம் வரையான காலகட்டத்தில் Westminster தாக்குதல் தொடர்பில் 12 பேரை கைது செய்துள்ளனர்.

மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பில் 23 பேர், லண்டன் பாலம் தாக்குதல் தொடர்பில் 21 நபர்களையும் பிரித்தானிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் பயங்கரவாத அமைப்புகளில் இணையும் பொருட்டு குறிப்பிட்ட நாடுகள் நோக்கி பயணப்படும், அல்லது அந்த நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்து சேரும் நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 12 மாதங்களில் 226 பயங்கரவாத தொடர்பு நபர்களை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இது முந்தையை ஆண்டைவிட 70% அதிகம் எனக் கூறப்படுகிறது.

மட்டுமின்றி பயங்கரவாத தடுப்பு பொலிசாரின் துரித நடவடிக்கைகளால் நாட்டின் முக்கிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பலவும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் தாக்குதல் நடைபெறுவதற்கு நிமிடங்கள் முன்பாக அதை முறியடித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளைவிடவும் மிகவும் அதிகம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த சில வாரங்களில் மட்டும் 5 பயங்கரவாத தாக்குதல்களை முறியடித்துள்ளதாகவும், அதனால் பெரும் உயிர்ச்சேதங்களை தவிர்த்துள்ளதாகவும் பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்