உயிருக்கு போராடும் கணவன்: தவிக்கும் மனைவி! வீட்டு உரிமையாளர் செய்த இரக்கமற்ற செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா
1907Shares

புற்றுநோய் பாதிப்பால் நபர் ஒருவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரின் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற வீட்டு உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிரித்தானியாவின் Hertfordshire கவுண்டியை சேர்ந்தவர் Wayne Barton (35) இவர் மனைவி Lisa Faulkner (37). இவர்களுக்கு Bryony-May (5) என்ற மகள் உள்ளார்.

Wayne-க்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து oesophageal மற்றும் கல்லீரல் புற்று நோய் உள்ளது.

தற்போது நோய் முற்றியுள்ள நிலையில், Wayne இன்னும் எத்தனை காலம் உயிரோடு வாழ்வார் என தெரியாத நிலையே உள்ளது.

இந்த சோகத்துக்கு மத்தியில் Wayne மற்றும் Lisa-வுக்கு மற்றொரு பிரச்சனையும் உள்ளது. அதாவது இவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என வீட்டு உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வீட்டு வாடகையை சரியாக Wayne கொடுத்து வந்த நிலையிலும், வீட்டை விற்கும் முடிவில் உரிமையாளர் இதை செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எந்நேரத்திலும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற நிலையே Wayneக்கும், Lisa-வுக்கும் உள்ளது.

இதனிடையில் தங்களுக்கு வேறு வீடு ஒதுக்க வேண்டும் என Lisa பிரித்தானியாவின் Broxbourne Councilலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Council அதிகாரிகள் Wayne குடும்பத்துக்கு வீடு தருவதாக கூறி சில மாதங்கள் கடந்த பிறகும் அதை இன்னும் செயலில் அவர்கள் செய்யவில்லை.

இது குறித்து Lisa கூறுகையில், இப்போது நாங்கள் இருக்கும் வீட்டில் உள்ள இடம் எங்களுக்கு போதுமானதாக இல்லை.

இங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற நிலையிலேயே உள்ளோம்.

மூன்று பெட்ரூம் கொண்ட குடியிருப்பு வேண்டி Broxbourne Council-லிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

சீக்கிரம் எங்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை என்றால் நாங்கள் தங்க இடம் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவோம் என கூறியுள்ளார்.

Broxbourne Council செய்தி தொடர்பாளர் கூறுகையில், Wayne- பிரச்சனை எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு வீட்டை உடனடியாக எங்களால் ஒதுக்க முடியவில்லை.

விரைவில் வீட்டை அவர்களுக்கு கொடுக்கவுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்