13 வயது சிறுமி உட்பட 118 பாலியல் புகார்... சிக்கினார் மன்மத டாக்டர்

Report Print Basu in பிரித்தானியா
978Shares

பிரித்தானியாவில் டாக்டர் ஒருவர் மீது 118 பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோம்போர்டு நகரத்தை சேர்ந்த 47 வயதான மனீஷ் ஷா என்ற டாக்டர் மீதே இத்தனை பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

118 குற்றங்களில் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தையை பாலியல் தாக்குதல் செய்ததும் அடங்கும். நீண்ட கால விசாரணைக்கு பின்னர் ஷா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குற்றங்கள் அனைத்தும் யூன் 2004 முதல் யூலை 2013 க்கு இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மனீஷ் ஷா பல முறை பிணை கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில், டாக்டர் மனீஷ் ஷா, ஆகஸ்ட் 31ம் திகதி Barkingside Magistrates நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்