யார்க்ஷயர் வானொலி ஒலிபரப்பிய தீவிரவாதிகளின் பேச்சு: அதிர்ச்சியில் நிர்வாகம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் ஷெபீல்ட் பகுதியில் இருந்து இயங்கும் இஸ்லாமியர்களுக்கான வானொலியில் தொடர்ந்து 25 மணி நேரம் அல் கொய்தா பயங்கரவாதிகளின் பேச்சுக்கள் ஒலிபரப்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷெபீல்ட் பகுதியில் இருந்து இயங்கும் இஸ்லாமியர்களுக்கான இமான் பண்பலை வானொலி நிலையத்தில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரமலான் மாதத்தை அடுத்து இமான் பண்பலைவரிசையில் சிறப்பு பேச்சாளர்களின் உரைகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஒலிபரப்பான உரையானது குறித்த பண்பலை வானொலியின் உரிமத்தை ரத்து செய்யும் அளவுக்கு சென்றுள்ளது.

அதில் பேசிய Anwar al-Awklaki என்பவர் புனிதப் போருக்கு ஆயத்தமாக வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறார். குறித்த நபர் பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்க அரசால் சேர்க்கப்பட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர் ஆவார்.

இதனைடையே குறித்த சம்பவமானது தவறுதலாக நடந்தது எனவும், குறிப்பிட்ட ஒலிநாடாக்களில் பதிவாகியிருக்கும் பேச்சுக்களின் தன்மை குறித்து அறியாமலே ஒலிபரப்பானது எனவும் வானொலி நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் இந்த விளக்கத்தை ஒப்புக்கொள்ள மறுத்த அரசு அதிகாரிகள் உரிமத்தை திரும்பப்பெற முடிவு செய்துள்ளனர். பண்பலை நிறுவன உரிமையாளர்கள் உரிய விளக்கத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் அல்லது அடுத்த 21 நாட்களில் வானொலி ஒலிபரப்பு முடக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17 ஆண்டுகளாக குறித்த பண்பலை சேவையை சிறப்பாக நடத்தி வந்துள்ளதகவும் ஆனால் இதுவரையும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக ஒருபோதும் செயல்பட்டது இல்லை எனவும் இமான் பண்பலை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments