மான்செஸ்டர் தாக்குதல்: தீவிரவாதி தாக்குதல் குறித்து முன்னரே வந்த எச்சரிக்கை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த திங்களன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலியானார்கள், 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலை சல்மான் அபேடி (22) என்னும் தீவிரவாதி தான் நடத்தியுள்ளான்.

இந்நிலையில் பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருவதாக FBI உளவுத்துறை கடந்த ஜனவரி மாதமே பிரித்தானிய அரசுக்கு கீழ் இயங்கும் MI5 பாதுகாப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள FBI உளவுத்துறை அதிகாரிகள், கடந்த 2016ஆம் வருடத்திலிருந்தே சல்மான் குறித்த விடயங்களை சேகரித்து வந்துள்ளார்கள்.

இதை தொடர்ந்தே அவர்கள் பிரித்தானியாவின் MI5 பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளிடம் சல்மான் குறித்து எச்சரித்துள்ளார்கள்.

அதன் பின்னர், சல்மான் குறித்து ஆராய்ந்த MI5 நிறுவனம், அவன் அரசியல் பிரபலத்தை கொல்ல வாய்ப்புள்ளது என நினைத்துள்ளார்கள்.

மேலும், இன்னொரு தீவிரவாதியான மசூத்தையும் அந்நிறுவனத்தினர் கண்காணித்துள்ளார்கள்

ஆனால் தற்போது அவன் வேறு விதமான தாக்குதலை பொதுமக்கள் மீது நடத்தியுள்ளான்.

இதுபற்றி பிரித்தானியாவின் ரகசிய சேவை நிறுவனம் கூறுகையில், சல்மான் அபேடியை பயங்கரவாதிகள் பட்டியலில் தான் வைத்திருந்தோம்.

ஆனால், அவன் இவ்வளவு ஆபத்தானவன் என அப்போது கருதவில்லை என கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments