மான்செஸ்டர் தாக்குதல்: தந்தைக்காக உயிரை பணயம் வைத்த ரியல் ஹீரோ சிறுமி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது 14 வயது சிறுமி தனது தந்தைக்காக உயிரை பணயம் வைத்துள்ள நெகிழ வைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

14 வயதான டெமி ஹாய்லி என்ற சிறுமி தனது பெற்றோருடன் அரியானா கிராண்டே இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். குண்டு வெடிப்பின் போது ஹாய்லின் தந்தை ஆண்டி அப்பகுதிக்கு மிக அருகில் இருந்துள்ளார்.

ஹாய்லியும், அவரது தாய் Leanneவும் அரங்கிற்கு உள்ள செல்ல முயன்ற போது வெடிகுண்டு சத்தத்தை கேட்டு மக்கள் அலறியடித்து ஓடிவந்துள்ளனர்.

கூட்டத்தில் சிக்கிய இருவரும் மக்களுடன் சேர்ந்து ஓடிய நிலையில் பாதுகாப்பான இடத்தை சேர்ந்துள்ளனர். தந்தைக்கு என்ன ஆனது என துடித்த ஹாய்லி, அவருக்கு போன் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது ஹாய்லி, Leanne இருவரது போனும் செயலிழந்துள்ளது. இந்நிலையில் தாயை பத்திரமாக அங்கேயே இருக்கும்படி அறிவுரை கூறிய ஹாய்லி, தைரியமாக தனது தந்தைக்காக மீட்க மீண்டும் அரங்கிற்கு உள்ளே சென்றுள்ளார்.

ஹாய்லின் தந்தை ஆண்டி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்துள்ளார். சில மணிநேரத்திற்கு பிறகு மூவரும் அருகில் உள்ள ஓட்டலில் சந்தித்துள்ளனர்.

தற்போது ஆண்டி தந்தைக்காக தனது மகள் உயிரை பணயம் வைத்த கதையை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments