பிரித்தானியா பொதுத் தேர்தல்: யார் ஜெயிப்பார்கள்? மெகா சர்வே முடிவுகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் தெரெசா மே சார்ந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி தான் ஜெயிக்கும் என பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் ஜூன் மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் எந்த கட்சி தேர்தலில் ஜெயிக்கும் என கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அதன் முடிவுகள் வருமாறு:

ORB நிறுவனத்தின் முடிவுகள்

 • கன்சர்வேட்டிவ் கட்சி : 44%
 • தொழிலாளர் கட்சி : 38%
 • லிபரல் கட்சி : 7%
 • சுதந்திர கட்சி : 5%

YouG நிறுவன முடிவுகள்

 • கன்சர்வேட்டிவ் கட்சி : 43%
 • தொழிலாளர் கட்சி : 36%
 • லிபரல் கட்சி : 9%
 • சுதந்திர கட்சி : 4%

Opinium முடிவுகள்

 • கன்சர்வேட்டிவ் கட்சி : 45%
 • தொழிலாளர் கட்சி : 35%
 • லிபரல் கட்சி : 7%
 • சுதந்திர கட்சி : 5%

ComRes நிறுவனம் நடத்திய சர்வேயில், தெரெசா மே தான் பிரித்தானியாவுக்கு சிறந்த பிரதமராக இருப்பார் என 51 சதவீதம் பேரும், தொழிலாளர் கட்சி தலைவர் Corbyn சிறந்த பிரதமராக இருப்பார் என 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரவிருக்கும் பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் பலத்த போட்டி நிலவும்.

இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த தெரெசா மே உலக அளவில் பிரித்தானியாவுக்கு பிரதிநிதித்துவம் பெற்று தருவார் எனவும் அந்நாட்டுக்கு குடியேறுபவர்களை அவர் பெருமளவில் குறைப்பார் எனவும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதே சமயத்தில், தொழிலாளர் கட்சியின் தலைவர் Corbyn, தேசிய சுகாதார பராமரிப்பு அமைபான NHS-ன் தரத்தை உயர்த்துவார் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments