பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிப்பு: லட்சக்கணக்கான பயணிகள் அவதி

Report Print Fathima Fathima in பிரித்தானியா

உலகின் முன்னணி விமான சேவையான பிரிட்டிஷ் ஏர்வேஸின் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கணனியில் ஏற்பட்ட திடீர் கோளாறே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஹீத்ரூ, காட்விக் மற்றும் பெல் பாஸ்ட் விமான நிலையங்களிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரிட்டன் மட்டுமல்லாது உலகெங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

(Photo: REUTERS)

விமானத்தில் இருந்தவர்களும் வெளியேற அனுமதிக்கப்படாத காரணத்தினால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பலமணிநேரம் காத்திருந்தும் விமான நிலையத்தை விட்டு வெளியேற பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதற்காக மன்னிப்பு கோரியுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், பயணிகளுக்கான கட்டணத் தொகையை திருப்பி செலுத்த முடிவு செய்துள்ளது.

(Photo: Flynet Pictures)

300,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 150 மில்லியன் பவுண்ட்டை பயணிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது, வரலாற்றிலேயே இதுதான் அதிக தொகையாகும்.

இதற்கிடையே ரேன்சம்வேர் தாக்குதலை போன்று கணனிகளில் வைரஸ் தாக்குதல் நடந்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

(Photo: Flynet Pictures)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments