பிரித்தானியா டூ சிரியா: ஐஎஸ் அமைப்பில் இணைய முயற்சித்தவருக்கு சிறைத்தண்டனை

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் இருந்து வெளியேறி ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள Willesden பகுதியை சேர்ந்தவர் Patrick Kabele(33). இளம்வயது முதல் தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட இவர் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டு தண்டனையும் பெற்றவர் ஆவர்.

இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் 20-ம் திகதி லண்டனில் உள்ள Gatwick விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது நபரிடம் சோதனை செய்தபோது அவரிடம் 3,000 யூரோ பணமும் ஒரு கடிதமும் இருந்துள்ளது.

கடிதத்தை பார்த்தபோது அதில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து போர் தொடுக்க உள்ளதாக சில குறிப்புகள் இருந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், இஸ்தான்பூல் வழியாக சிரியாவிற்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

நபரை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

விசாரணையின் முடிவில் அவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளனர்.

விமான நிலைய அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டதால் இந்நபரை கைது செய்ய முடிந்துள்ளதாக பொலிசார் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments