பிரித்தானியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்கள்: ஒரு தொகுப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் மான்செஸ்டர் அரங்கத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட நிலையில், சமீபத்தில் பிரித்தானியாவை உலுக்கிய தாக்குதல்களின் பட்டியல் இவை.

லண்டன், 7 யூலை 2005

நான்கு தற்கொலை பயங்கரவாதிகள் லண்டன் போக்குவரத்து அமைப்பு மீது 2005 ஆம் ஆண்டு, யூலை 7ம் திகதி தாக்குதல் தொடுத்தனர்.

இதில் மூன்று குண்டுகள் லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டன. இதில், 27 பேர் கொல்லப்பட்டனர்.

நான்காவது வெடிப்பு டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள ஓர் நெரிசல் மிகுந்த பகுதியில் பேருந்துக்குள் நிகழ்ந்தது. அதில், 14 பேர் கொல்லப்பட்டனர். இதுவே 7/7 என பிரபலமாக குறிக்கப்படும் ஒரு நாளானது.

கிளாஸ்கோ விமான தாக்குதல், 30 ஜூன் 2007

பிரித்தானிய பிரதமராக கோர்டன் பிரவுன் பதவியேற்று மூன்று தினங்கள் ஆன நிலையில், இரு நபர்கள் கிளாஸ்கோ விமான நிலைய முனைய கட்டிடத்தினுள் தங்களுடைய ஜீப்பை ஓட்டி சென்றனர். பின்னர், அந்த வாகனம் தீப்பிழம்பாக வெடித்து சிதறியது.

ஜீப் ஓட்டுநரான கஃபீல் அஹமது வாகனத்திலிருந்து தப்பிவிட்டார். பின்னர், தீயினால் ஏற்பட்ட காயம் காரணமாக கஃபீல் மரணம் அடைந்தார். இந்த தாக்குதலில் வேறு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

லீ ரிக்பி, 22 மே 2013

மிஷெல் அடெபோலஜோ மற்றும் மிஷெல் அடெபொவல் என்ற இரு ஆண்கள் தென் கிழக்கு லண்டனில் உள்ள வூல்விச் பகுதியிலிருந்த ராணுவ குடியிருப்புக்கு வெளியே இருந்த சாலையில் பிரிட்டிஷ் ராணுவ வீரர் லீ ரிக்பியை கொன்றனர்.

ராணுவ வீரர் ரிக்பி கார் ஏற்றி கொல்லப்பட்டார். பிரித்தானிய ஆயுதமேந்திய படைகள் இஸ்லாமியர்களை கொலை செய்வதற்கு பழிக்குப்பழியாக இந்த ராணுவ வீரரை கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய இருவரும் நைஜீரிய வம்சாவளியை சேர்ந்த பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ காக்ஸ், 16 யூன் 2016

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸை, தாமஸ் மெயர் என்பவர் கொலை செய்தார். வடபுற இங்கிலாத்தில் உள்ள வெஸ்ட் யார்க்க்ஷையரின் பர்ஸ்டால் நகரத்தில் ஒரு நூலகத்திற்கு வெளியே ''பிரித்தானியாதான் முதலில்'' என்று கத்தினார்.

ஜோ காக்ஸை, மெயர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்றார். அச்சமயம் அனைவரும் தப்பிக்கும்படி ஜோ காக்ஸ் கத்தியது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதல், 22 மார்ச் 2017

லண்டனில் உள்ள நாடாளுமன்ற இல்லத்திற்கு அருகே வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் சென்ற பாதசாரிகள் மீது காலித் மசூத் என்பவர் தான் ஓட்டிச்சென்ற வாகனத்தால் இடித்து விபத்துக்குள்ளாக்கினார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திலிருந்த அரண்மனையின் வெளிப்புற கதவுகளில் மசூத் தன்னுடைய காரை மோதினார்.

பின்னர், காரிலிருந்து இறங்கி முன்னேற முயற்சித்த போது கீத் பால்மர் என்ற பொலிஸ் அதிகாரியை கத்தியால் கொடூரமாக தாக்கிய அந்த நபரை பிற அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

பொலிஸ் அதிகாரி பால்மர் மற்றும் நான்கு பாதசாரிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments