குண்டுவெடிப்பில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய பிச்சைக்காரர்: குவியும் நிதி

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய பிச்சைக்காரர் ஒருவரின் துணிச்சலை பாராட்டி பொதுமக்கள் நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.

மான்செஸ்டர் மைதானத்தில் கடந்த திங்கள் கிழமை இரவு நிகழ்ந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் கொல்லப்பட்டனர். 59 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டை உலுக்கிய இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த பின்னர் உயிருக்கு போராடிய நபர்களை காப்பாற்றிய பிச்சைக்காரர் ஒருவருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன.

தாக்குதல் நிகழ்வதற்கு முன்னர் கிரைஸ் பார்க்கர்(33) என்ற அந்த நபர் மைதானத்திற்கு வெளியே நின்றுக்கொண்டு நபர்களிடம் உணவு, பணம் கேட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, திடீரென பலத்த ஓசையுடன் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதலின் விளைவாக கிரைஸ் பார்க்கர் அதிர்ச்சியில் கீழே விழுந்துள்ளார்.

ஆனால், சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்ட அவர் தாக்குதல் நிகழ்ந்த இடத்தை நோக்கி ஓடியுள்ளார்.

பின்னர், அங்கு உயிருக்கு போராடிய கால்களை இழந்த சிறுமி ஒருவரை காப்பாற்றி வெளியே தூக்கிச்சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து உயிரை இழக்கும் தருணத்தில் இருந்த பெண் ஒருவரை தனது கைகளால் தாங்கி பிடித்து ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் இறுதியில் உயிரை விட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னரும், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பலரையும் கிரைஸ் பார்க்கர் காப்பாற்றி வெளியே அழைத்து வந்துள்ளார்.

கிரைஸ் பார்க்கரின் இத்துணிச்சலை பாராட்டி பொதுமக்கள் அவருக்கு சுமார் 4,000 பவுண்ட் வரை நிதி வசூல் செய்து கொடுத்துள்ளனர். மேலும், கிரைஸ் பார்க்கரின் செயலை பாராட்டி ‘மனிதத்தன்மை உங்களை போன்றவர்களிடம் இன்னும் இருக்கிறது’ என புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments