பிரித்தானியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: பிரதமர் தெரெசா மேவின் எச்சரிக்கை

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரிட்டனின் மான்செஸ்டர் தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரதமர் தெரெசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் பலியாகினர், 120 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து பிரதமர் தலைமையில் அவரச கூட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் பேட்டியளித்த பிரதமர் தெரெசா மே, தற்போது நடத்தப்பட்ட தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம்.

நாட்டிற்கு அச்சுறுத்தல் அதிகமாகி இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிரிட்டனின் முக்கிய இடங்களில் பொலிசுக்கு பதிலாக இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் செயல்படுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments