கற்பழிப்பு குற்றவாளிக்கு அடித்தது யோகம்: இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பலாத்கார வழக்கில் சிக்கிய சட்டவிரோதமாக குடியேறிய நபர் ஒருவர் அதிக நாட்கள் சிறையில் கழித்ததற்காக இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக குடியேறியவர் 36 வயதான Bashdar Abdulla Qarani.இந்நிலையில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனக் கூறி கைது செய்த பொலிஸ் இவரை இரண்டாடுகள் சிறையில் தள்ளியது.

தண்டனை காலம் முடிவுக்கு வந்ததும் சிறையில் இருந்து வெளியேறிய பஷ்டர் சிறு சிறு திருட்டு, வழிப்பறி, கத்தியுடன் அலைதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதாவதும் தண்டனை காலத்திற்கு பின்னர் விடுப்பதும் வாடிக்கையாக நடந்து வந்தது.

இந்த நிலையில் South Wales பகுதியில் இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றார் என்ற குற்றத்திற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பஷ்டர் விடுதலையாக இருந்த நிலையில் குறித்த நபர் மாயமாக வாய்ப்பு இருப்பதாக கருதி அதிகாரிகள் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பஷ்டர் எந்த நாட்டினர் என்பதை நிரூபிக்க தேவையாக ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பதாலும், பிரித்தானிய அதிகாரிகளால் அதை நிரூபிக்க முடியவில்லை எனவும் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், குறித்த குற்றவாளி அடிக்கடி மாயமாகும் கருத்தை ஏற்றுக்கொண்டாலும், அவர் தண்டனை காலம் முடிந்து மேலும் 11 மாதங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தனி மனித உரிமையை பறிக்கும் செயல் என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபருக்கு 27,000 பவுண்டு (இலங்கை மதிப்பில் ரூ.5090608) இழப்பீடாக வழங்க லண்டன் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி Mott உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த நபர் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறும் பெண்ணிற்கு இழப்பீடாக அரசு சார்பில் 7,500 பவுண்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவை தொண்டு நிறுவனம் ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த வழக்கானது குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் நீதியை பெற்றுத்தருவதில் நீதித்துறை தவறிழைத்துள்ளதாக கணடனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments