பிரித்தானியாவை சோகத்தில் ஆழ்த்திய பால்மரின் இறுதி ஊர்வலம்! ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் கீத் பால்மரின் இறுதி ஊர்வலம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

48 வயதான பால்மரின் உடல் லண்டன் வழியாக சவுத்வார்க் கதீட்ரலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் அணிவகுத்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

பொதுவாக தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் வெஸ்ட்மினிஸ்டர் சேப்பலில் பால்மரின் உடலை அடக்கம் செய்ய ராணி அனுமதி அளித்துள்ளார். பால்மரின் இறுதி ஊர்வல வாகனத்தில் NO 1 DADDY என எழுதப்பட்டிருந்தது.

பால்மரின் இறுதிச் சடங்குக்காக இரண்டாயிரம் பொலிஸ் அதிகாரிகள் ரோந்து வாகனத்திலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

15 ஆண்டுகளாக பெருநகர பொலிஸாக பணியாற்றி பால்மருக்கு திருமணமாகி ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments