பிரித்தானியாவில் மதுபான வர்த்தக கடை வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியாவில் மதுபானம் விற்பனை செய்யும் இடங்களிலும், (Off-licence) இரவு நேரங்களில் தாமதமாக சிற்றுண்டி வழங்கும் இடங்களிலும் (Restaurant) சட்டவிரோதமற்ற முறையில் வேலை செய்பவர்களை தடுக்கும் நோக்கில் குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட புதிய அதிகாரங்கள் ஏப்ரல் 06 லிருந்து இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நடைமுறைக்கு வந்துள்ளன.

குடிவரவுச் சட்டம் 2016(Immigration Act 2016) இன்கீழ், இவ்வாறான மது விற்பதற்கான வர்த்தக அனுமதிகளுக்கு(Premises Licence) விண்ணப்பங்கள் மேற்கொள்வதற்கு குடிவரவுச் சோதனை(Immigration Checks) ஒரு முக்கியமான விடயமாக இருக்கும்.

அத்துடன், ஏப்ரல் 6ம் திகதியிருந்து, யுகேயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் அனுமதி இல்லாதவர்களுக்கும் இவ்வாறான வர்த்தகங்களை நடத்துவதற்குரிய தனிப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் மற்றும் வர்த்தக அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அனுமதிப் பத்திரம் வழங்குவதும், அதனை தொடர்ந்து வழங்கப்பட்ட அனுமதியை நடைமுறையில் வைத்திருப்பதும், யுகே குடிவரவு விதிமுறைகளை மதித்து நடப்பதில் தான் தங்கியிருக்கும் என இந்த அதிகாரங்கள் காண்பிக்கின்றன.

அதனைத் தவிர, இவ்வாறான வர்த்தக அனுமதி வழங்கப்படும் பொழுது முன்னர் பொலிசாரைத் தொடர்பு கொண்டு சோதனை மேற்கொள்வது போன்று, இனிமேல் உள்விவகாரத் திணைக்களமும் தொடர்பு கொள்ளப்படும்.

ஒரு வர்த்தகக் கடை குடிவரவுக் குற்றவியல்கள் மற்றும் சிவில் தண்டனைகளைக் கொண்டிருந்தால் அவைகளும் இவ்வாறானஅனுமதிப் பத்திர விண்ணப்பங்களின் பொழுது கருத்திற் கொள்ளப்படும்.

அத்துடன் அனுமதிகளை மீளாய்வு(Review)செய்வதற்கும் இந்தக் குற்றச் செயல்கள் ஒருகாரணியாகவும் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குடிவரவு அதிகாரிகளுக்கும், பொலிஸ் மற்றும் அமுலாக்க அதிகாரிகளும்(Enforcement Officers)போன்று, இவ்வாறான வர்த்தக நிலையங்களுக்குள் விராந்து(Warrant) இல்லாமல் உள்நுழைந்து குடிவரவு குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்குரிய அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06லிருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய அதிகாரங்கள் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் மற்றப் பகுதிகளான ஸ்கொட்லாந்திலும், வடஅயர்லாந்திலும் விரைவில் அமுலுக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இச்சட்டமானது மனித உரிமைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில் இவை சில சட்டச் சிக்கல்களையும் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கடைக்கு மேல் வீடு இருந்தால் இந்த சட்டம் வீட்டுக்குள் நுழைவதற்கு இடம் கொடுக்கின்றதா என்ற கேள்வியும் எழுப்பப்படலாம்.

அத்துடன் சட்டவிரோதமான வேலைகளை தடுப்பதற்காக கொண்டு வந்தாலும், இது வேலை அனுமதி இல்லாதவர்களுக்கு கடினமான சூழலை உருவாக்கப் போகின்றது என்பதும் தவிர்க்க முடியாததாகும்.

Jay Visva Solicitors
மேலதிக தொடர்பு எண் 0208 573 6673

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments