பிரித்தானியா நாட்டிலிருந்து சீனாவிற்கு நேரடி ரயில் சேவை: இன்று தொடங்கியது

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் இருந்து சீனாவிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் நேரடி ரயிலின் முதல் சேவை இன்று தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரில் இருந்து பிரித்தானிய நேரப்படி இன்று காலை 10.35 மணியளவில் இந்த ரயில் புறப்பட்டுள்ளது.

30 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட மது வகைகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற சரக்குகள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக அனுப்பட்டுள்ளது.

சுமார் 7.500 மைல்கள் தூரம் பயணிக்கும் இந்த ரயில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி, போலந்து, பெலரஸ், ரஷ்யா, கசகஸ்தான் ஆகிய 7 நாடுகளை கடந்த ஏப்ரல் 27-ம் திகதி சீனாவை அடையும்.

விமானத்தில் சரக்குகளை அனுப்புவதை விட ரயிலில் சரக்குகளை அனுப்புவதால் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதாலும், கப்பலை விட ரயில் அதி வேகமாக சீனாவை அடையும் என்பதால் இந்தப் பயணம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இச்சேவை மூலம் பிரித்தானிய மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் வர்த்தகம் வலுமை பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments