பிரித்தானியாவில் 2017ன் செம ஹாட்டான நாள்: வானிலை மையம் அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுவதால் அதை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.

பிரித்தானியாவில் பல இடங்களில் சூரிய வெயிலின் தாக்கம் தற்போது உச்சத்தில் உள்ளது.

கேம்பிரிட்ஜில் அதிகபட்சமாக நேற்று 25.5C டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது, பிரித்தானியாவின் பல பகுதிகளில் 20C வெப்பம் பதிவாகியுள்ளது.

கிழக்கு மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் வெயில் அதிகம் கொளுத்துகிறது. ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் குறைந்தபட்சமாக 16C வெப்பம் பதிவாகியுள்ளது.

Leicestershire பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென நேற்று தீப்பற்றி எரிந்தது. வெயில் தாக்கத்தால் அது சூடாகி எரிந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்தில் இருப்பது போல கடுமையான வெயில் பிரித்தானியாவை தற்போது வாட்டுகிறது.

இனி மெல்ல வெயில் தாக்கம் குறைய தொடங்கும், மக்கள் அதிகம் வெளியில் போக வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments