லண்டன் நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் முதல்முறையாக நியமனம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் நகர நீதிமன்றத்தில் முதல்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள டண்டி நகரில் பிறந்தவர் அனுஜா ரவீந்திரா (49), இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

இவர் டன்டி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அனுஜாவுக்கு 1989-ம் ஆண்டில் லண்டனில் இருந்து கல்வி உதவித்தொகையுடன் அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் லண்டன் நகரில் உள்ள நீதிமன்றங்களில் அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞராக சுமார் 23 ஆண்டுகள் அனுஜா பணியாற்றினார்.

இந்நிலையில் லண்டன் நகரில் உள்ள ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தின் நீதிபதியாக அனுஜா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் லண்டன் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை அனுஜா பெற்றுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments