லண்டன் ராப் பாடலில் நடித்த ஐஎஸ் தீவிரவாதி! வைரலாகும் வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

ஐஎஸ் தீவிரவாதி குழுவில் முக்கிய நபராக திகழ்ந்த ஒருவர் லண்டனில் எடுக்கப்பட்ட ராப் இசைபாடல் வீடியோவில் தோன்றியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

21 வயதான ஜூனைட் ஹுசைன் என்ற தீவிரவாதியே பிரபல லண்டன் ராப் பாடகர் Tabanacle'sயின் அரசாங்கத்திற்கு எதிரான கொள்கை பாடல் வீடியோவில் தோன்றியுள்ளார்.

குறித்த பாடல் லண்டன் அடையாளமாக திகழும் செயின்ட் பால் கதீடரல் தேவாலயத்திற்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் ஐஎஸ் இயக்கத்திற்காக ஆட்கள் சேர்த்து வந்த ஜூனைட் ஹுசைன் கடந்த 2015ம் ஆண்டு சிரியாவில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது நினைவுக் கூரக்கது.

குறித்த காட்சியில் அவருடன் மேலும் இரண்டு ஐஎஸ் உறுப்பினர்கள் தோன்றியுள்ளனர். தற்போது, வெளியாகியுள்ள குறித்த ராப் பாடல் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments