டயானா வழியில் இளவரசர் ஹரி செய்ய போகும் அதிரடி விடயம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி டயானா வழியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்தில் இளவரசர் ஹரி பெரும் முனைப்பு காட்டி வருகிறார்.

பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானா உலகளவில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

அதை அப்படியே அவர் மகனான இளவரசர் ஹரி பின்பற்றி வருகிறார். பிரித்தானிய அரசு வரும் 2025குள் உலகிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்துக்கு 100 மில்லியன் பவுண்டுகளை முதலீடு செய்யவுள்ளது.

இந்த திட்டம் குறித்து சர்வதேச வளர்ச்சி அமைப்பின் செயலர் பிரீத்தி கூறுகையில், இந்த நிதி முதலீடு திட்டம் இன்னமும் வெடிக்காத நிலக்கண்ணி வெடிகளை அகற்ற உதவும் என கூறியுள்ளார்.

இந்த திட்டத்தில் அதிக அக்கறை காட்டி வரும் ஹரி கூறுகையில், இந்த திட்டத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கியதன் மூலம் அரசின் அர்ப்பணிப்பு வெளியாகியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments