லண்டனில் அகதி மீது கொடூர தாக்குதல்! 9 பேர் அதிரடி கைது

Report Print Basu in பிரித்தானியா

லண்டனில் ஈரானிய அகதி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் 9 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கடந்த 31ம் திகதி லண்டனில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் வைத்து 17 வயதுடைய ஈரானிய அகதி இளைஞர் ஒருவர், 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிரச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் 9 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். புகைப்படத்தில் உள்ளவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனே பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments